கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, சி.வி. சண்முகம் MP முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு அதிமுகவின் அடையாளத் துண்டை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற சி.வி. சண்முகம், அவர்கள் கட்சியில் இணைந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் பலத்தைப் பெருக்கும் நோக்கில் அதிமுக தலைமை மாற்றுக்கட்சியினரைத் தொடர்ந்து தன் பக்கம் ஈர்த்து வருவதால், இந்த இணைப்பு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
