விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து நடைபெற்று முடிந்தது இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததை அடுத்து ரசிகர்கள் இது விஜயின் கடைசி சினிமா நிகழ்ச்சி என்றும் கடைசி இசை வெளியீட்டு விழா என்றும் சுருக்கமாக பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர் இந்நிலையில் சாட்டை துரைமுருகன் எக்ஸ் வலைதளத்தில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில், நடிகர் விஜய் 2026-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள், அதாவது தேர்தல் முடிந்த உடனேயே மீண்டும் நடிக்கத் தொடங்கிவிடுவார் என்று சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.
Morning yae சாட்டை அண்ணன்
ஓட vijay Roast @Saattaidurai #JanaNayaganAudioLaunchpic.twitter.com/0vBbMchlOi— தல அரவிந்த் (@aravinth43AK) December 28, 2025
“ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், இது விஜயின் கடைசி ஆடியோ லாஞ்ச் அல்ல என்றும், 2026-ல் மற்றொரு ஆடியோ லாஞ்ச் நிச்சயம் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, விஜயின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்கள் யாரும் சோகமடைய வேண்டாம் அல்லது ‘லாஸ்ட் செல்ஃபி’ போன்ற உணர்வுப்பூர்வமான பதிவுகளைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
