சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சுற்றுலாவுக்காகப் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு உள்ளூர் பொதுச் சந்தையைச் சுற்றிப் பார்க்க அவர்கள் முடிவெடுத்தபோது, எதிர்பாராத ஒரு பயங்கரச் சூழலை அவர்கள் எதிர்கொண்டனர். அவர்கள் சந்தைக்குள் நுழைந்த அடுத்த கணமே, அங்கிருந்த ஒரு பெரும் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. கட்டுக்கடங்காத அந்த கும்பலின் நடத்தையால் அந்தச் சிறுமி கடும் அச்சமடைந்து தனது தாயின் பின்னால் ஒளிந்துகொண்டார்.
Terrifying. A Swedish woman and her daughter travel to Pakistan as tourists and decide to explore a local public market.
They are immediately surrounded by a pack of zombies who cannot control themselves. The girl is petrified and hides behind her mom, who also seems frozen.… pic.twitter.com/VIaWq5bnFf
— Dr. Maalouf (@realMaalouf) December 27, 2025
அந்தத் தாயும் எங்கும் நகர முடியாமல் உறைந்து நின்ற காட்சி காண்போரைக் கலங்கச் செய்கிறது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த ஒரு சில நல்லுள்ளங்கள் தலையிட்டு, அந்த கும்பலிடமிருந்து தாய் மற்றும் மகளைப் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது எக்ஸ் வலைதளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
