X வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, பெண் குழந்தை மீதான சமூகத்தின் பார்வையை மீண்டும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் காணொளியில், மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே கொண்டு வருகின்றனர்.

அப்போது அது பெண் குழந்தை என்று சொன்னதும், அங்கிருந்த ஒரு பெண்மணி அந்தக் குழந்தையைக் கையில் வாங்கத் தயக்கம் காட்டியது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், இன்னும் இந்த நவீனக் காலத்திலும் பெண் குழந்தையைச் சமூகத்தில் ஒரு பாரமாகக் பார்க்கும் மனநிலை நிலவி வருவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.