சமீபத்தில் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், ஒரு பழைய பேட்டியில் தனது எதிர்காலம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்திருந்தது தற்போது வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், தனது 45-வது வயதில் அரசியலில் இறங்கி ‘சைரன் வைத்த வண்டியில்’ பயணிப்பார் என்று ஜோதிடர் கணித்ததாக ரோபோ சங்கர் கூறியுள்ளார். அப்போது, குறுக்கிட்ட ஆதவன், “அப்படியானால் அந்தச் சைரன் வைத்த வண்டி எங்கே?” என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர் சிரித்துக்கொண்டே “அதைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

​விதியின் தற்போது, ரோபோ சங்கர் இறந்தபோது, அவரது சடலம் சைரன் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டது. அவர் அன்று நகைச்சுவையாகக் கூறியது, அவரது இறுதிப் பயணத்தைத்தான் முன்னறிவித்ததோ என்று பலரும் பெரும் சோகத்துடனும், ஆச்சரியத்துடனும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.