Instagram பக்கத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தக் காணொளியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு நபர், தன்னை மறித்துச் பணம் கேட்ட ஒரு திருநங்கையிடம், தன்னிடமும் பெட்ரோல் போடப் பணம் இல்லை, பர்ஸ் கொண்டு வரவில்லை என்று கூறி, அவரிடமே ₹100 கேட்டுள்ளார். எதிர்பாராத இந்தச் சூழலில், அந்தத் திருநங்கையும் தயக்கமின்றி ₹100 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த நபர் அந்தப் பணத்தைத் திரும்பவும் அந்தத் திருநங்கையிடமே கொடுத்து, இது ஒரு விழிப்புணர்வு காணொளி என்று விளக்கியுள்ளார். ‘உதவும் கரங்கள்’ என்ற தலைப்பில் வெளியான இந்தக் காணொளி, மனிதாபிமானம் இன்னும் குறையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது.