சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் பொறுப்புணர்வை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்து அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் சாலையில் குப்பை போடும் சில சிறுவர்களிடம், அப்படிச் செய்ய வேண்டாம் என்று மிகவும் பொறுமையாகவும் அன்பாகவும் அறிவுரை கூறுகிறார்.
ஆனால், அந்தச் சிறுவர்கள் அவரது பேச்சை மதிக்காமல், அவரிடம் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். அவர் பணம் தர மறுத்ததும், வேண்டுமென்றே அந்தப் பெண்ணின் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் குப்பைகளைச் சாலையில் வீசி எறிகின்றனர். இதைக் கண்டு வருத்தமடைந்த அந்தப் பெண், “இது உங்கள் நாடு, இங்கேயே குப்பையைப் பரப்பினால் நீங்கள் இந்த அழுக்கில்தான் வாழ நேரிடும்” என்று அவர்களுக்குப் புரிய வைக்க முயல்கிறார்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ பரவியது முதல் இந்திய இணையவாசிகள் பலரும் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இது அந்தச் சிறுவர்களின் தவறு மட்டுமல்ல, அவர்களுக்குச் சரியான ஒழுக்கத்தைக் கற்றுத்தராத பெற்றோரின் தோல்வி” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், அந்தப் பெண் காட்டிய அமைதியைப் பாராட்டியும், இந்தியச் சிறுவர்களின் இந்த அநாகரீகமான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். நம் நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வளரும் சிறுவர்களின் நிலை காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
