மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சோனாஜி லாகே (51) என்பவர் நீண்ட நாட்களாகப் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது மருத்துவச் செலவுகளாலும், வறுமையினாலும் அந்தக் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. தந்தையின் உடல்நலக் குறைபாட்டையும், அதிகரித்து வரும் கடன் சுமையையும் தாங்க முடியாத அவரது மகன்கள் உமேஷ் (25) மற்றும் பஜ்ரங் (23), ஒரு விபரீத முடிவை எடுத்தனர்.
தங்கள் பெற்றோரை இந்தக் கஷ்டத்திலிருந்து விடுவிக்க எண்ணிய மகன்கள், தந்தை ரமேஷ் மற்றும் தாய் ராதாபாய் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நிதிச்சுமை தவிர வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
