தன்னையும், விஜய்யையும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்தார். “பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.-ம் எங்களைப் பெற்றெடுத்த போது, அண்ணன் திருமாவளவன் தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தாரா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னை நீண்டகாலமாகவே ‘போலி தமிழ் தேசியவாதி’ என்று திருமாவளவன் கூறி வருவதாகவும், அவர் தனது அண்ணன் என்பதால் அந்த விமர்சனங்களை பெரிதுபடுத்தப் போவதில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.

​சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், அரசியல் ரீதியான பல முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. திருமாவளவனின் கடுமையான விமர்சனத்தை சீமான் மிக எளிதாகக் கையாண்ட விதம், அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.