தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இவ்வளவு தீவிரமாகச் செயல்படுவதற்கு அதிமுகவே முக்கியக் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். பாஜகவை மீண்டும் தோளில் தூக்கிச் சுமப்பதன் மூலம், அதிமுக மிகப்பெரிய தமிழினத் துரோகத்தைச் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜக வலுப்பெற்றால் எதிர்காலத்தில் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும், பெரியார் முன்னெடுத்த அரசியலுக்கு அது பெரும் ஆபத்தாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பாஜகவின் வளர்ச்சி என்பது சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் சுதந்திரமான நடமாட்டத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். அதிமுகவினர் தற்கொலைக்குச் சமமான ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இது ஒட்டுமொத்த தமிழக அரசியலின் போக்கையும் சிதைத்துவிடும் என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
