தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துத் தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், உதவி ஆய்வாளர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருந்ததால், அவர் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்தை டவுன் ஏ.எஸ்.பி. மதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
