சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி இத்தகைய ஒரு திகைப்பூட்டும் காட்சியைப் படம்பிடித்துள்ளது. காட்டில் இருந்து வெளியேறிய ஒரு பெரிய முதலை, எந்தவித அச்சமும் இன்றி மிகவும் நிதானமாக சாலையைக் கடக்கிறது. வழக்கமாக விலங்குகள் வாகனங்களைக் கண்டால் மிரண்டு ஓடும், ஆனால் இந்த முதலையோ எதற்கும் கவலைப்படாமல் தனது கம்பீரமான நடையினால் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்து போய், அது கடந்து செல்லும் வரை தூரத்திலேயே காத்திருந்தனர். இந்த 19 விநாடி காணொளி (X) பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட முதலையைப் பார்த்த நெட்டிசன்கள், அதை ஒரு “டைனோசர்” என்று வர்ணிப்பதோடு, இயற்கை நமக்குச் சொல்லும் பாடம் இதுவெனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

மனிதர்களுக்கான சாலையில் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும், அவை சாலையைக் கடக்கும்போது நாம் அவற்றுக்கு வழிவிட்டு மதிக்க வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.