பிரேசிலைச் சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் என்ற 37 வயது பெண், ஒரு துணி பொம்மையை மணந்து தற்போது தனது நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்செலோ என்ற ராக் டால் (துணி பொம்மை) பொம்மையை அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பிரசவ வலி எடுப்பது போல் நடித்து, குளியலறைக்குச் சென்று மற்றொரு சிறிய துணி பொம்மையைப் பிரசவித்ததாகக் காட்டியுள்ளார். இந்த புதிய பொம்மைக்கு ரோப்சு மார்செலினோ என்று பெயரிட்டுள்ள அவர், தனது குடும்பம் வளர்ந்து வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திரமான குடும்பத்தில் ஏற்கனவே மார்செலோவிற்கு மூன்று வயது மகன் மற்றும் இரட்டைப் பெண் பொம்மைகள் உள்ளனர். இப்போது நான்காவது குழந்தை பிறந்துள்ளதால், இவ்வளவு பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற தனது பொம்மை கணவர் மார்செலோ கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என மெய்ரிவோன் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meirivone Rocha ( Mulher do boneco) (@meirivone_santinha)

“>

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த லட்சக்கணக்கான மக்கள், “அறிவியலுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறதே” என்றும், “இணையத்தில் பார்க்க வேண்டியது இது ஒன்றுதான் பாக்கி இருந்தது” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.