விஷப் பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே உலை வைக்கும் என்பதை அறிந்தும், சில இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், சீறிப்பாயும் ஒரு ராஜநாகத்தின் முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞர், அது கொத்த வரும் நிலையிலும் அசராமல், மின்னல் வேகத்தில் அந்த பாம்பின் தலையைத் தனது வாயால் கவ்விப் பிடிக்கிறார்.
भाई का यमराज जी के साथ रोज का उठना बैठना है🤣🤣🤣
पूरी सांप बिरादरी सदमे में है 😂😂😂 pic.twitter.com/7HddEHhnoT
— DR. HEMANT MAURYA (@DrHemantMaurya) December 24, 2025
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பாம்பு நிலைகுலைந்து போகிறது. “எமதர்மனுடன் இவருக்குத் தினமும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கும் போல” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துகளைப் பகிர்ந்தாலும், பாம்பின் விஷம் ஒரு நொடியில் உயிரைப் பறிக்கக்கூடியது என்பதை மறக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வைரலாகும் இந்த 29 வினாடி காட்சி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
