வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிரை சமாளிக்க இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மேற்கொண்ட வினோத முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க உடல் முழுவதும் போர்வையைச் சுற்றிக்கொண்டு, தலையில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்ந்தபடி அவர் வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சி காண்போரை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
அந்தப் பக்கெட்டில் சாலை தெளிவாகத் தெரிவதற்காகக் கண் பகுதியில் இரண்டு துளைகளை அவர் இட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்தியர்களின் இத்தகைய வினோத கண்டுபிடிப்புகளையும் சமயோசித புத்தியையும் பாராட்டி வரும் இணையதளவாசிகள், குளிருக்காக அவர் மேற்கொண்ட இந்த விசித்திரமான உத்தியை சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
