சீனாவின்  சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு காதலி ‘வாங்’ மீது தொடர்ந்த வினோதமான வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கொடுத்த 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தையும், காதலியின் உடை மற்றும் இதர செலவுகளுக்காகச் செலவிட்ட 30,000 யுவான் பணத்தையும் திரும்பத் தருமாறு அவர் கோரினார்.

குறிப்பாக, தனது குடும்ப உணவகத்தில் வேலை செய்த வாங் மிக அதிகமாகச் சாப்பிட்டதாகவும், சரியாக உழைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், வாங் இந்த புகார்களை மறுத்ததுடன், அவர் பண விஷயத்தில் மிகவும் கஞ்சத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலியின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் காதலின் அடையாளமாகவும் செலவு செய்த 30,000 யுவானைத் திரும்பத் தரத் தேவையில்லை என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. இருப்பினும், பாரம்பரிய முறைப்படி வழங்கப்பட்ட 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தில் பாதியை மட்டும் 10,000 யுவான் திருப்பித் தருமாறு உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை இருவருமே ஏற்றுக்கொண்டனர். ஒரு பெண்ணின் உணவுப் பழக்கத்தையும் உழைப்பையும் காரணம் காட்டி நீதிமன்றம் வரை சென்ற அந்த நபரின் செயல் இணையத்தில் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.