நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். தான் சினிமா கவர்ச்சியால் தான் ஆட்சிக்கு வந்தேன் என்று சொன்னால் முதலமைச்சர் விஜய்க்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.
தியாகங்கள் செய்து, சிறைக்கொட்டடிகளை அனுபவித்து, நெல்சன் மண்டேலா மாதிரி 27 வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டா விஜய் ஆட்சிக்கு வந்தார் என்று காரசாரமாகக் கேட்ட சீமான், விஜய் முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்ததற்கு அவர் சினிமாவில் நடித்த வித்தைதான் ஒரே காரணம் என்று ஓப்பனாகவே சாடினார். தொடர்ந்து விஜய்யின் சினிமா கேரியரை அக்குவேறா ஆணிவேறா கிழித்த சீமான், விஜய் தன் வாழ்நாளில் நடித்த 69 படங்களில் ஒரு படம் கூட உருப்படியான, நல்ல படம் கிடையாது என்று மிகக் காட்டமாக விமர்சித்தார்.
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? – ஒருமையில் விமர்சித்த சீமான்#NTK | #Seeman | #TVK | #PolimerNews pic.twitter.com/ilfp7YGrJt
— Polimer News (@polimernews) June 6, 2026
சினிமாவில் ஒரு நல்ல படம் கூட தராதவர், தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு நல்ல ஆட்சி தருவார் என்று இந்த மக்கள் நம்புகிறார்கள் என அவர் ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆருக்குப் பாடல்களில் ஒழுக்கம் இருந்தது, ரஜினி, கமலுக்குக் கூட சமூகக் கருத்துக்கள் கொண்ட நல்ல படங்கள் உண்டு என்று சுட்டிக்காட்டிய சீமான், வெறும் சிகரெட் பிடிப்பதையும், கண் சிமிட்டுவதையும் பார்த்துவிட்டு விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று சாடினார். “இதில் கோவித்துக் கொள்ள என்ன இருக்கிறது சிஎம் சார்? உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்” என்று சீமான் விடுத்த இந்த நேரடி சீண்டல் தவெக மற்றும் நாம் தமிழர் தொண்டர்களிடையே பயங்கர மோதலை உருவாக்கியுள்ளது.
