​ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், அ.தி.மு.க.வின் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல் களத்தில் தற்போது செயலில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும் என்றும், களத்தில் இல்லாதவர்களையும் அல்லது களத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்களையும் தேவையில்லாமல் எதிர்க்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அ.தி.மு.க. தரப்பினர் தங்களை எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் குறிப்பிட்ட அவர், “நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எங்களால் யாரையும் எதிர்க்க முடியாது பாஸ்” என்று தனது பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், தங்களது அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிரிகளைத் தீர்மானிப்பதில் தவெக தனித்துவமான பாதையைப் பின்பற்றும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.