தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அவர் பேசியதாவது, திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி. நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன.? நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்குள்ள மக்கள் பிரச்சனைகளை பேசி வருகிறேன். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது அரசியல் இல்லை என்றால் வேறு எது அரசியல். உங்களை மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அசிங்க அசிங்கமாக பேசுறது தான் அரசியலா.? அந்த அரசியல் எனக்கு வராது. வராது என்றால் உங்களை விட எனக்கு நல்லாவே வரும் என்று அர்த்தம். ஆனால் வேண்டாம் என்று தான் விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

நான் காஞ்சிபுரத்தில் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று ஒரு சில விஷயங்களை கூறிய நிலையில் அதை எல்லாம் தப்பு தப்பாக புரிந்து விட்டு பேசுகிறார்கள் நான் இப்போது தெளிவாக சொல்கிறேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது மக்களின் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி என்று நீங்கள் இலவசம் என்று கூறுகிறீர்கள் இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை ஓசில போறோம்னு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க நாங்க என்ன ஓசிலையா போறோம் கேட்க ஆள் இல்லை என்று நினைத்தீர்களா நான் இருக்கிறேன் விஜய் இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் நான் மக்களின் பக்கம் இருக்கிறேன் என்று கூறினார். மேலும் 10 வயதில் சினிமாவுக்கு தான் வந்துவிட்டதாகவும் 33 வருடங்களாக மக்களுக்கும் தனக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும் கூறினார்.