தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் தமிழ்நாட்டின் சொத்து. நான் அவர்களிடமிருந்து கொள்கைகளையும் அரசியல் வியூகங்களையும் எடுத்துள்ளேன். இதனை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாங்கள் எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவோம். உங்களுக்குத்தான் TVK ஒரு பொருட்டே இல்லையே. அப்புறம் எதற்கு கதறுறீங்க. இது எப்படி இருக்கு என்றால், எங்களுக்கு பயமில்லை எங்களுக்கு பயம் இல்லைன்னு சொல்லிட்டு கால் நடுங்கியபடி சின்ன குழந்தை நடந்து செல்வது போல் இருக்கு.
முதல்ல மண்டையில இருக்கிற கொண்டையை மறைங்க சார். சும்மா மாறுவேடத்தில் மறு வைத்துவிட்டு மீடியா ஆளு ஆடியோ ஆளுன்னு வாரிங்க. எங்களுக்கு யாருன்னு தெரியாதா? தமிழக மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனிச்சுட்டு தான் இருக்கிறாங்க. உங்களுக்கு நீங்க கொள்ளை அடிச்சு வச்சிருக்க காசுதான் துணை ஆனால் எனக்கு மக்கள் மேல வைத்திருக்க பாசம் என்கிற மாஸ் தான் துணை என்றார். மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும் என்றும் இல்லாதவர்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்றும் கூறினார்.
