தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதில், “விஜய் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாகவும், பேச வேண்டிய இடத்தில் பேசவும் பழக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக நிர்வாகி அருண்ராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணாமலை சொன்ன டயலாக் மற்றவர்களுக்குப் பொருந்துமோ இல்லையோ, அவருக்குச் சரியாகப் பொருந்தும். அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால், இன்று இருக்க வேண்டிய உயரிய இடத்தில் இருந்திருப்பார்.

எங்கள் தலைவர் எப்போது, எதைப் பேச வேண்டும் என்று அண்ணாமலை சொல்லத் தேவையில்லை; அது எங்கள் தலைவருக்கு நன்றாகவே தெரியும்” என்று சாடியுள்ளார். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.