தமிழக வெற்றி கழகத்தினர் எளிய நிலையில் சிறு கடை நடத்தி வரும் ஒரு பெண்ணைச் சந்தித்து, “உங்களுக்கு டவுனில் ஒரு கடை வைத்து கொடுத்தால் மகிழ்ச்சியா?” என்று கேட்கின்றனர். அந்தக் கேள்வியைச் செவிமடுத்த அந்தப் பெண்ணின் முகத்தில் மின்னிய அந்தப் புன்னகை, கோடி ரூபாயைக் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு பேரானந்தம். உதவியைப் பெறுபவரின் அந்த ஒரு நொடி மகிழ்ச்சியே மனிதாபிமானத்தின் உச்சம்.

தேவை உள்ளவர்களுக்கு நேரடியாகக் களத்தில் இறங்கி உதவும் தமிழக வெற்றி கழகத்தின் இச்செயல் வெறும் அரசியல் பணி மட்டுமல்ல, அது ஒரு ஆழமான உணர்வு. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தொடும் இதுபோன்ற செயல்கள் மூலம் #TVK மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.