தமிழ்நாடு பாஜகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. கட்சியின் தூணாக விளங்கிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, “We The Leaders” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளனர். அண்ணாமலையின் இந்த அசுர வேக வளர்ச்சியைத் தடுக்க தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு பிரதமர் மோடியின் ஆதரவு இல்லை என்று அறிக்கை விட்டும், அண்ணாமலைக்கு பெருகும் ஆதரவு அலையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

​இதன் உச்சக்கட்டமாக, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பொதுச் செயலாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பழனியில் முன்னாள் மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். ஆரம்பகால உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் அனைவரும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அடுத்தடுத்து விழும் இந்த அடியால் தமிழக பாஜக தலைமை தற்போது செய்வதறியாது மிரண்டு போய் உறைந்து நிற்கிறது.