தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடந்து வரும் நிலையில், தவெக அரசுக்கும் அதன் அமைச்சர்களுக்கும் குடைச்சல் கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அதிரடியான அறிக்கை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சரான சிடிஆர் நிர்மல்குமார் குறித்து அவர் வைத்துள்ள ‘ஸ்பை’ (ஒற்றன்) குற்றச்சாட்டு கோட்டையை உலுக்கியுள்ளது.

​செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார், தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சொல்வதை யாரும் நம்பாதீர்கள். அவர் பொதுமக்களிடமும், ஊடகங்களிடமும் சொல்வது எல்லாமே சுத்த பொய்” என்று சராமாரியாக வறுத்து எடுத்தார்.

​அத்தோடு நிறுத்தாமல், ஒட்டுமொத்த தவெக நிர்வாகிகளையும் நெஞ்சைப் பதற வைக்கும் ஒரு ரகசியத்தை உடைத்தார் ஆர்பி உதயகுமார். “சிடிஆர் நிர்மல்குமார் வேறு யாரும் இல்லை, அவர் எங்களுடைய ஆளுதான். ‘முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக முடித்துவிட்டு வாப்பா’ என்று சொல்லி, அவரைத் திட்டமிட்டு தவெகவிற்குள் அனுப்பி வைத்ததே நாங்கள்தான்” என்று பகிரங்கமாகக் கூறி அரசியல் வெடிகுண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

​மேலும், தற்போதைய தவெக அரசின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த அதிமுக ஒரு பெரிய நெட்வொர்க்கை வேலை செய்ய வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “அதிமுகவின் ‘SPY’ (ஒற்றன்) ஆக தவெகவிற்குள் இருக்கும் சிடிஆர் நிர்மல்குமார், சிஎம் விஜய் அரசுக்குத் தொடர்ந்து நிர்வாக ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தமிழகம் முழுவதும் மின் தடையை அவரே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்” என்று மிகக் கொடூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​ஆளுங்கட்சியான தவெகவின் அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரை, எதிர்க்கட்சியான அதிமுக “எங்களுடைய ஒற்றன் தான் அவர், நாங்கதான் அனுப்பி வச்சோம்” என்று பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் என்ன மாதிரியான அதிரடி ஆக்ஷன் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் எகிறியுள்ளது.