பஞ்சாப் மாநிலம்,லூதியானாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், வெளிநாடு செல்வதற்காக இருமுறை எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில், அவரது தந்தை மகன் தூங்கச் சென்ற அறையின் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்தார். கதவைத் திறந்தபோது, மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
12-ஆம் வகுப்பு முடித்த அந்த இளைஞர், எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற வெறியில் இருந்ததாகவும், முயற்சி கைகூடாததால் தீவிர மனவேதனையில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
