பீகார் மாநிலம்  நடந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பற்றியது. அங்கு ஒரு கிராமத்தில், கிராம மக்கள் ஒரு மதகுருவையும்  திருமணமான ஒரு பெண்ணையும் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக அந்த மதகுரு பணிபுரிகிறார்.

பிடிபட்டவுடன் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இருவரையும் ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கினர். இந்தச் சம்பவம் டிசம்பர் 7ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் தாக்குதலின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தத் தாக்குதலின் போது, கிராம மக்கள் சிலர் குச்சிகள் மற்றும் தடிகளால் மதகுருவை கடுமையாக தாக்கியுள்ளனர், பெண் பயந்துபோனார்.

“>

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கூடிய கிராம பஞ்சாயத்து, இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிக்கும் விதமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சமரசம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தாக்குதல் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதால், இதுகுறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.