இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட அலுவலகக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) நண்பகல் நேரத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதில், ஜப்பானிய நிறுவனத்தின் துணை அலுவலகமான ‘டெர்ரா ட்ரோன் இந்தோனேசியா’வில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது பலர் மதிய உணவு இடைவேளைக்காக வெளியே சென்றிருந்தபோதிலும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பெரும்பாலானோர் தீக்காயங்களால் அல்லாமல், மூச்சுத் திணறலால் இறந்திருக்கலாம் என ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் சுசாடியோ பூர்ணோமோ காண்ட்ரோ தெரிவித்துள்ளார்.
