நாஞ்சில் சம்பத்தை போலவே, குமரி முத்துக்குருஷ்ணன் என்ற மற்றொரு மூத்தத் தலைவரும் விஜய்யின் கட்சியில் இணைந்துள்ளார். இவர் 1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். காலத்தில் குமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்தவர்.
2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இணைக்கும் முயற்சியில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தீவிரம் காட்டுவது அரசியல் கவனத்தைப் பெற்று வருகிறது.
