தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில்ச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மத மோதல்களை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

உயர் நீதிமன்றத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியத் தீர்ப்பு குறித்து, தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் வாதத்தை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

தீபத்தூண் என்பது கோவிலுக்குச் சொந்தமானச் சொத்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கோவில் செயல் அலுவலரைத் தி.மு.க. அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்த அண்ணாமலை, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியச் சட்டத்துறை அமைச்சர், பழையத் தீர்ப்புகளை திரித்துப் பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக இந்து மத பக்தர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், திருப்திப்படுத்தும் அரசியலைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.