வங்கக் கடலில் நிலவும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு, ‘திட்வா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்திலும் கனமழை மற்றும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. புயலின் நகர்வுகள் மற்றும் மழைப்பொழிவின் தீவிரத்தைப் பொறுத்து இந்த விடுமுறை அறிவிப்புகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
