சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் (Government Buses) நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டுத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ₹1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.