சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 92160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட்  தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 12567 ரூபாய்க்கும், ஒரு சவரன் 100536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 171000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.