தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நேற்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தற்குறிகள் என்று குறிப்பிடுவதாக விஜய் பேசி இருந்தார். நேற்று நடந்த கூட்டத்தில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் எதற்காக விஜயை தொட்டோம் எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று கண்டிப்பாக வருத்தப்படுவார்கள் என்றும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான் நடைபெறும் என்றும் கூறினார். இதற்கு தற்போது திமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நாங்கள் தற்போது வரை அண்ணா சொன்னதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோமே தவிர அவர் சொன்ன விஷயத்திலிருந்து ஒரு துளி கூட விலகவில்லை.
திமுக அரசு கல்வி உணவு, உரிமை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது வரை மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளின் உரிமைக்காக போராடி வருகிறது. அவருக்கு அண்ணா யார் என்றே தெரியாது அதோடு முதல்வராகும் ஆசையில் அவர் இருக்கிறார். நடிகர் விஜய் மக்கள் மயக்கம் அடைந்ததை பற்றி கவலைப்படாமல் இருந்தவர். நாங்கள் யாரையும் தற்குறி என்று பேசவில்லை. மேலும் திமுக வை பற்றி குறை சொல்ல விஜய்க்கு எந்த அருகதையும் கிடையாது என்றார்.
