தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காஞ்சிபுரம் கூட்டத்தில் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“அண்ணா சொன்னதைத்தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதில் இருந்து ஒரு துளிகூட நாங்கள் விலகவில்லை. தற்போது வரை மாநில உரிமைக்காக மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை, பெண் பாதுகாப்புக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. தமிழ்நாடு மணிப்பூர் அல்ல. இங்கே பெண்களுக்கு எதிராக என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், விஜய்க்கு அண்ணா யாரென்றே தெரியாது.

முதல்-அமைச்சர் ஆகும் ஆசையில் அவர் இருக்கிறார்” என்று சாடினார். மக்கள் மயக்கம் அடைவதைப் பற்றி கவலைப்படாமல் இருந்த விஜய், தங்களைப் பற்றிக் குறை சொல்வதற்கு அருகதை இல்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.