முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அ.தி.மு.க.வின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. அணிகளை இணைப்பது குறித்து தான் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவை தனித்தனியாகச் சந்தித்துப் பேசியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். தன்னை அரசியலில் இருந்து யாரும் தனிமைப்படுத்த முடியாது என்று கூறிய அவர், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.