தென்காசியில் இன்று தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் திடீரென நேருக்கு நேர் மோதிய நிலையில் பயங்கர விபத்து ஏற்பட்டதோடு ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.