தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.அதன் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை,விருதுநகர் , மயிலாடுதுறை , தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறும், மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது