தென் மாவட்டங்களைப் புரட்டி எடுக்கும் கனமழையின் தாக்கம் சிவகங்கை மாவட்டத்திலும் உணரப்படுவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.