வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வட மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் உணரப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மழையின் காரணமாகப் பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படலாம் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளது என்பதால், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கவனத்துடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
