கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணையைச் சேர்ந்த தஃபஸ்ஸுல் ஹுசைன் என்ற ஏழாம் வகுப்பு மாணவன், பள்ளி நேரம் முடிந்த பிறகு பைபாஸ் சாலையில் டீ விற்று வந்துள்ளான். ஏனெனில், இவனது தந்தை இறந்த நிலையில், நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்தச் சிறுவனுக்கு இருந்துள்ளது. இந்தச் சிறுவனின் கடின உழைப்பை வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்தனர். இந்தப் பதிவு விரைவாக வைரலானதால், பல முக்கியப் பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்தது.

​இதையடுத்து, பெரிந்தல்மண்ணை நகரசபை தலைவர் பி. ஷாஜி தனது முகநூல் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ஹுசைனின் கல்விச் செலவு, தாயின் மருத்துவச் செலவு மற்றும் குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நகரசபையே ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

வீடியோவை காண

இவரைத் தொடர்ந்து, பெரிந்தல்மண்ணை சட்டமன்ற உறுப்பினர் நஜீப் காந்தபுரம் அவர்களும் சிறுவனின் வீட்டிற்குச் சென்று, அவனது அனைத்துத் தேவைகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய இந்தச் சிறுவனுக்கு இரண்டு முக்கியப் பிரமுகர்கள் உதவியதால், அவனது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.