மும்பையில் உள்ள பரபரப்பான தாதர் ரயில் நிலையத்தில், அக்டோபர் 26-ம் தேதி அன்று ஒரு சோகமான சம்பவம் நடந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், மதுபோதையில் இருந்த நிலையில், திடீரென ஒரு கத்தியால் தன்னையே குத்திக் கொண்டுள்ளார். சிறிது நேரத்திலேயே, அவர் நடைமேடை அருகில் வந்த ரயிலின் முன் குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த அதிர்ச்சியான சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அங்கே பணியில் இருந்த இரண்டு பாதுகாப்பு வீரர்கள், அதாவது ரயில்வே காவலர் ஸ்வப்னில் போபெரே மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ராகுல் யாதவ் ஆகியோர் மிக வேகமாகச் செயல்பட்டனர். அந்த நபர் ரயிலின் முன் குதிக்க முயன்ற மறுகணமே, இருவரும் ஓடிச் சென்று அவரைப் பத்திரமாக இழுத்து, ரயிலின் அடியில் சிக்காமல் காப்பாற்றினர்.
एका प्रवाशाने अचानक स्वतःवरच धारदार चाकूने वार करत आत्महत्येचा प्रयत्न केला. त्यावेळी स्थानकावर सेवेवर असलेल्या होमगार्डने तत्परतेने धाव घेत त्या प्रवाशाचे प्राण वाचवले. #dadar #railway #CCTV pic.twitter.com/MDs36mTKzN
— Ankita Shantinath Khane (@KhaneAnkita) October 28, 2025
இதனால், ஒரு பெரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
உயிரைக் காப்பாற்றிய இந்தக் காவலர்களின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த நபருக்கு உடனடியாகச் சயான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சரியான நேரத்தில் செயல்பட்ட காவலர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
