தருமபுரியில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பிற்கு தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
“இந்த செயல் தலைவர் பதவியை உருவாக்கினேன். ஆனால், ஒருவரோ அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனவே, இந்த பொறுப்பை என் பெரிய மகளான ஸ்ரீகாந்திமதிக்கு வழங்குகிறேன்” என கூறிய அவர், இந்த நியமனம் பாமக வளர்ச்சிக்கு புதிய தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். இந்த அறிவிப்பு பாமக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
