த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவுடன் நடக்கும் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அதிமுக தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை தமாகா சந்திக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு வரவேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைமைப் பொருள் கொண்ட அதிமுகவின் தலைமையிலான வலுவான கூட்டணியே தமிழக மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
தமாகா தனது கொள்கைப் பாதையில் உறுதியாக செயல்படவுள்ளதாகவும், எதிர்க்கட்சி சக்திகள் ஒருமித்த அணியாக செயல்பட வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.
