அதிமுக எம்.பி.வும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான தம்பிதுரை (வயது 78) உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பிதுரையின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன