முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதை ஒட்டி மாவட்டத்தில் பொதுநலத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மதுவிற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது