தேன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதன் இனிப்பு சுவை மனதை கவர்ந்தாலும், தேனை உருவாக்கும் தேனீக்களைப் பார்த்தால் பலருக்கு பயம் வரும். தேனீ கொட்டினால் வலி மட்டுமல்ல, சிலருக்கு உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனால், சமூக வலைதளத்தில் பரவிய ஒரு காணொளியில், ஒரு இளைஞர் தேனீக்களை பயமின்றி கையாளுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வயதான நபர் தனது வீட்டின் கழிவறையில் தேன் கூடு கட்டியிருப்பதாக இளைஞர் ஒருவரை உதவிக்கு அழைக்கிறார்
அந்த இளைஞர் தேனீக் கூட்டை தனது கைகளால் எளிதாக அகற்றுகிறார், அப்போது ஏராளமான தேனீக்கள் அவரது கையில் அமர்ந்திருக்கின்றன. இது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாகவும், சற்று பயமாகவும் இருக்கிறது. இந்த இளைஞர் தேனீ வளர்ப்பவர் என்பதால், தேனீக்களுடன் ஒரு புரிதல் இருப்பதாகக் கூறுகிறார். அதனால், அவரை தேனீக்கள் கொட்டுவதில்லை என்று அவர் விளக்குகிறார். இந்த காணொளி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேன் கூட்டை பிரிந்தவர் அந்த தேனை வயதான நபரிடமே கொடுத்துவிட்டு இது தான் இருப்பதிலையே சுவையான தேன் என்று கூறியுள்ளார். பொதுவாக தேனீக்களை பார்த்தாலே மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால், இவரைப் போன்றவர்கள் தேனீக்களை அன்புடனும், தைரியத்துடனும் கையாள்கிறார்கள். இது தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தையும், அவற்றுடனான நெருக்கமான உறவையும் எடுத்துக்காட்டுகிறது.
