சமூக வலைத்தளத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு நபர் பேருந்து நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவர் அருகில் ஒரு கனமான பை இருக்கிறது. தூரத்தில் இருந்து ஒரு பயணிகள் பேருந்து வர அந்த நபர் கையால் சைகை செய்து பேருந்தை நிறுத்துகிறார். பேருந்து அவர் அருகில் வந்து நிற்க எல்லோரும் அவர் பேருந்தில் ஏறப் போகிறார் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கு நடந்தது முற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம். பேருந்து நின்றவுடன், அந்த நபர் பேருந்தில் இருந்து ஒருவரை அழைப்பது போலத் தெரிகிறது.

பேருந்தில் இருந்து ஒரு பயணியும், பேருந்து உதவியாளரும் இறங்குகிறார்கள். உதவியாளர் பையை பேருந்தில் ஏற்றுவதற்காக கதவைத் திறக்கிறார். அப்போது மற்றொரு பயணி அந்தப் பையை எடுத்து, பேருந்தை நிறுத்திய நபரின் தலையில் வைக்கிறார். பையைத் தூக்கிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இதைப் பார்த்த பேருந்து உதவியாளரும், பையை எடுத்த பயணியும் அதிர்ச்சியடைகின்றனர். “இதற்காகவா பேருந்தை நிறுத்தினார்?” என்று வியப்பில் முகம் சுளிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு, புன்னகையுடன் பகிர்ந்து வருகின்றனர்.