மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் புகழ்பெற்ற ‘டான்ஸிங் டிராஃபிக்’ போலீஸராக பரிசளிக்கப்பட்டிருந்த ரஞ்சீத் சிங், வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சினியர் அதிகாரிகளை சந்தித்து, தன் நிலைபாடை விளக்கி வந்த பிறகு மார்புவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
इंदौर के सबसे चर्चित डांसिंग ट्रेफिक कॉप रणजीत सिंह उलझे। महिला को इंदौर आने के लिए होटल और फ्लाइट की टिकट करने का ऑफर दिया महिला ने लगाई लताड़ बोली शेम ऑन यू pic.twitter.com/hMZAWqnu3K
— SanjayGupta_Journalist (@sanjaygupta1304) September 17, 2025
உடனடியாக ஷெல்பி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த உடல்நிலை சிக்கல், ஒரு இளம் பெண் சமூக வலைதளங்களில் ரஞ்சீத் சிங்கின் மீது புகார் எழுப்பிய பிறகு வந்தது. ‘Radhika Singh’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில், அந்த பெண் வெளியிட்ட இரண்டு வீடியோக்களில், ரஞ்சீத் சிங் தன்னை நட்பாக பழக அழைத்ததுடன், விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் ரூமும் ஒதுக்க முன்வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ரஞ்சீத் சிங் இந்த புகாரை முற்றிலும் மறுத்து, அந்த பெண் பிரபலமடைய முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த ராதிகா, “நான் உங்களைவிட அதிகம் பிரபலமானவள். நீங்கள் என்னை வைத்து பிரபலமாகப்போகிறீர்களா?” எனக் கேட்டபடி, இது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியிட்ட வீடியோவாகும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் இந்தூரில் பெரும் விவாதமாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் கலகலப்பாக பரவி வருகிறது.
