தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 22,000 ஆகவும் குடும்ப ஓய்வூதியம் 12000 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாதன் சேதுபதி, வ உ சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.