திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி.காலனியில் வசித்து வந்தவர் தான் பன்னீர்செல்வம். இவருக்கு ஷிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஷிபா அம்மையநாயக்கனூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று பன்னீர்செல்வமும் அரசு பள்ளி ஆசிரியர் ஆவதற்காக தகுதி தேர்வு எழுதி வந்தார். கடந்த வருடம் நடந்த தகுதி தேர்வில் பன்னீர்செல்வம் தேர்ச்சி பெறவில்லை என சொல்லப்படுகிறது.
தற்போது நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அவர் விண்ணப்பித்திருந்தார். எனினும் இந்த தேர்வில் வெற்றி பெற முடியுமா என பன்னீர்செல்வம் மிகுந்த பயத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் குழப்பத்தில் இருந்த பன்னீர்செல்வம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பன்னீர்செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
